சிவன் 1008 போற்றி
ஓம்
அகத்தியன் பள்ளி அமர்ந்தாய் போற்றி
ஓம்
அகத்தின் பள்ளி ஐயா போற்றி
ஓம்
அகரம் முதலின் எழுத்தானாய் போற்றி
ஓம்
அகில உலக நாதனே போற்றி
ஓம்
அங்கங்கே சிவமாகி நின்றாய் போற்றி
ஓம்
அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி
ஓம்
அஞ்சைக் களத்துறை அப்பா போற்றி
ஓம்
அடங்கலும் வேட்கையை அறுப்போய் போற்றி
ஓம்
அட்ட மூர்த்தியே போற்றி போற்றி
ஓம்
அடித்தாமரை மலர்மேல் வைத்தாய் போற்றி
ஓம்
அடியவர்க்கு அருளும் அண்ணலே போற்றி
ஓம்
அடியார் அடிமை அறிவாய் போற்றி
ஓம்
அடியார்க்கு அமுதெலாம் ஈவாய் போற்றி
ஓம்
அடியார்க்கு ஆரமுதம் ஆனோய் போற்றி
ஓம்
அடியார்க்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி
ஓம்
அடியும் முடியும் இல்லாய் போற்றி
ஓம்
அடியேமை ஆளுடைய அடிகள் போற்றி
ஓம்
அடியொடு நடுவீறு ஆனோய் போற்றி
ஓம்
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
ஓம்
அடைவே புனல்சூழ் ஐயாற்றாய் போற்றி
ஓம்
அண்டம தாய ஆதியே போற்றி
ஓம்
அண்டமேழ் அன்று கடந்தாய் போற்றி
ஓம்
அண்டவர் காணா அரனே போற்றி
ஓம்
அண்ணல்கே தீச்சரத்து அடிகள் போற்றி
ஓம்
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
ஓம்
அண்ணாமலை மேல் அணிமலை போற்றி
ஓம்
அணிநீல கண்டம் உடையாய் போற்றி
ஓம்
அணியாரூர்த் திருமூலட்டானனே போற்றி
ஓம்
அணுவாகி ஆதியாய் நின்றாய் போற்றி
ஓம்
அத்தனே அகில அரசனே போற்றி
ஓம்
அத்தனே இசையிற் பித்தனே போற்றி
ஓம்
அத்தனொடும் அம்மையெனக்கு ஆனோய் போற்றி
ஓம்
அத்திக் கருளிய அரசே போற்றி
ஓம்
அதிகைவீரட்டத் தழகா போற்றி
ஓம்
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம்
அந்திவாய் வண்ணத்து அழக போற்றி
ஓம்
அநேகதங் காவதம் அமர்ந்தாய் போற்றி
ஓம்
அப்பனும் அம்மையும் ஆனோய் போற்றி
ஓம்
அம்பர்க் பெருந்திருக் கோயிலாய் போற்றி
ஓம்
அம்பர்மாகாளத் தரனே போற்றி
ஓம்
அம்மை பயக்கும் அமிர்தே போற்றி
ஓம்
அமரர் பெருமான் போற்றி போற்றி
ஓம்
அமிழ்த கலைநாதா போற்றி போற்றி
ஓம்
அமுதே போற்றி தேனே போற்றி
ஓம்
அமையாவரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஓம்
அயன்மாலும் காணாத அரனே போற்றி
ஓம்
அரக்கனையும் ஆற்றல் அழித்தாய் போற்றி
ஓம்
அரசிலி நாதா ஐயா போற்றி
ஓம்
அரத்துறை நாதா போற்றி போற்றி
ஓம்
அரதைப் பெரும்பதி அமர்ந்தாய் போற்றி
ஓம்
அரவம் அரையில் அசைத்தாய் போற்றி
ஓம்
அரிசிற்கரைப்புத் தூரா போற்றி
ஓம்
அரியயற்கு எட்டா நிருத்தா போற்றி
ஓம்
அரியன வெல்லாம் அருள்வாய் போற்றி
ஓம்
அருகாக வந்தென்னை ஆள்வோய் போற்றி
ஓம்
அருகி மிளிரும் பொன்னே போற்றி
ஓம்
அருட்பா உரைப்பார்க்கு அன்பா போற்றி
ஓம்
அருட்பெருங்கடலே அமலா போற்றி
ஓம்
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
ஓம்
அரும்பே போற்றி அலகே போற்றி
ஓம்
அருமலரோன் சிரமறுத்தாய் போற்றி போற்றி
ஓம்
அருமறைக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம்
அருவமும் உருவமும் ஆனோய் போற்றி
ஓம்
அருவினை அனைத்தும் அறுப்பாய் போற்றி
ஓம்
அருளா போற்றி அழகா போற்றி
ஓம்
அரைசே போற்றி அமுதே போற்றி
ஓம்
அல்லல் அறுக்கும் நல்லாய் போற்றி
ஓம்
அல்லல் களைந்தே ஆள்வாய் போற்றி
ஓம்
அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
ஓம்
அலைகடன் மீமிசை நடந்தோய் போற்றி
ஓம்
அவத்தை அகற்றும் அண்ணல் போற்றி
ஓம்
அவளிவள் நல்லூர் அரசே போற்றி
ஓம்
அவிநாசிவ்வளர் அரனே போற்றி
ஓம்
அழகா போற்றி ஆரூரா போற்றி
ஓம்
அழகிய வரதா போற்றி போற்றி
ஓம்
அழுந்தூர் ஆளும் அரசே போற்றி
ஓம்
அளவில் பெருமை உடையாய் போற்றி
ஓம்
அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
ஓம்
அளியின் நீடு நிதியம் போற்றி
ஓம்
அற்றவர்க்கு அற்ற அரனே போற்றி
ஓம்
அறிவாய் போற்றி அறிவிப்பாய் போற்றி
ஓம்
அறிவை அறியும் பொருளே போற்றி
ஓம்
அறையணி நல்லூர் அரசே போற்றி
ஓம்
அன்பர் படியும் கடலே போற்றி
ஓம்
அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி
ஓம்
அன்பிலா லந்துறை அரசே போற்றி
ஓம்
அனலாடி யங்கை மறித்தாய் போற்றி
ஓம்
அன்னியூர் வளர் அரனே போற்றி
ஓம்
ஆக்கும் அழிவும் உடையாய் போற்றி
ஓம்
ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றி
ஓம்
ஆக்கூரில் தோன்றிய அப்பனே போற்றி
ஓம்
ஆகாய வண்ணம் உடையாய் போற்றி
ஓம்
ஆடக மதுரை அரசே போற்றி
ஓம்
ஆடக மதுரை அரசே போற்றி
ஓம்
ஆட்சி உலகை உடையாய் போற்றி
ஓம்
ஆட்டான அஞ்சும் அமர்ந்தாய் போற்றி
ஓம்
ஆடல்மால் யானை உரித்தாய் போற்றி
ஓம்
ஆடானையுறை ஆதீ போற்றி
ஓம்
ஆண்டுலகேழ் அத்தனையும் வைத்தாய் போற்றி
ஓம்
ஆணும் பெண்ணும் ஆனாய் போற்றி
ஓம்
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம்
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம்
ஆதி போற்றி அறிவே போற்றி
ஓம்
ஆதியும் அந்தமும் ஆனோய் போற்றி
ஓம்
ஆப்பா டிப்பதி அமலா போற்றி
ஓம்
ஆய்ந்து மலர்தூவ நின்றாய் போற்றி
ஓம்
ஆரா அமுதம் ஆனாய் போற்றி
ஓம்
ஆரா அன்பின் கனியே போற்றி
ஓம்
ஆரியன் போற்றி தமிழன் போற்றி
ஓம்
ஆரும் இகழப் படாதாய் போற்றி
ஓம்
ஆரூர் அரநெறி அப்பா போற்றி
ஓம்
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
ஓம்
ஆல நீழலில் அமர்ந்தாய் போற்றி
ஓம்
ஆலங்காட்டெம் அடிகள் போற்றி
ஓம்
ஆலம் பொழிலுறை அரனே போற்றி
ஓம்
ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தாய் போற்றி
ஓம்
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
ஓம்
ஆவடு தண்துறை அமரா போற்றி
ஓம்
ஆவா வென்றெனக்கு அருளாய் போற்றி
ஓம்
ஆவூர்ப்பசுபதீச் சரனே போற்றி
ஓம்
ஆழாமே அருளும் அரசே போற்றி
ஓம்
ஆளான வர்கட்கு அன்பா போற்றி
ஓம்
ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி
ஓம்
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
ஓம்
ஆனைக் காவுறை ஆதீ போற்றி
ஓம்
இடையாறிடையமர் ஈசா போற்றி
ஓம்
இந்திரத்தை இனிதாக ஈந்தாய் போற்றி
ஓம்
இராமன தீச்சரத் திறைவா போற்றி
ஓம்
இன்னம்பர் ஈசநின் இணையடி போற்றி
ஓம்
இன்னிசை மாலை ஏந்துவாய் போற்றி
ஓம்
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
ஓம்
உசாத்தா னத்தமர் <உறவே போற்றி
ஓம்
உடலாய் உயிராய் உள்ளாய் போற்றி
ஓம்
உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம்
உண்ணி லாவிய உணர்வே போற்றி
ஓம்
உமையாளை அகத்து அணைத்தாய் போற்றி
ஓம்
உய்யும் வண்ணம் உணர்த்துவாய் போற்றி
ஓம்
உரியன வெல்லாம் உவந்தாய் போற்றி
ஓம்
உருக்கண் மணியாய் போற்றி போற்றி
ஓம்
உருகாதார் உள்ளத்து நில்லாய் போற்றி
ஓம்
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
ஓம்
உரைக்கண் கடந்தாய் போற்றி போற்றி
ஓம்
உலகம் எல்லாம் உடையாய் போற்றி
ஓம்
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
ஓம்
உலகை நடுங்காமற் காப்பாய் போற்றி
ஓம்
உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
ஓம்
உளத்துள் சிறக்கும் உறவே போற்றி
ஓம்
உள்ளம் ஆர்ந்த உருவே போற்றி
ஓம்
உள்ளம் கவர்ந்த வள்ளலே போற்றி
ஓம்
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
ஓம்
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
ஓம்
உள்ளும் அன்பர் மனத்தாய் போற்றி
ஓம்
உறவே போற்றி உயிரே போற்றி
ஓம்
உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பாய் போற்றி
ஓம்
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
ஓம்
ஊராரும் மூவுலகத் துள்ளாய் போற்றி
ஓம்
ஊழித் தீயன்ன வொளியாய் போற்றி
ஓம்
ஊழியின் முடிவிலும் உள்ளாய் போற்றி
ஓம்
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓம்
எங்கும் உறைந்தருள் இறைவா போற்றி
ஓம்
எங்கும் நிறைந்தாய் போற்றி போற்றி
ஓம்
எண்ணரும் ஞானத் தின்பமே போற்றி
ஓம்
எண்ணும் எழுத்தும் ஆனோய் போற்றி
ஓம்
எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றி
ஓம்
எத்தனையும் பத்திசெய்வார்க்கு இனியாய் போற்றி
ஓம்
எத்திசை யுள்ளும் இருப்பாய் போற்றி
ஓம்
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி
ஓம்
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
ஓம்
எப்பொழுதும் எம்மனம் இருப்போய் போற்றி
ஓம்
எப்பொழுதும் என்னுள்ளத் துள்ளாய் போற்றி
ஓம்
எம்மிறை யானே ஏந்தலே போற்றி
ஓம்
எரிசுடர் ஆன இறைவா போற்றி
ஓம்
எருக்கத்தம்புலியூர் எந்தாய் போற்றி
ஓம்
எல்லாப் பொருளும் இயக்குவாய் போற்றி
ஓம்
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஓம்
எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி
ஓம்
என்றும் அருளே செய்வாய் போற்றி
ஓம்
என்றும் இருந்தாய் போற்றி போற்றி
ஓம்
என்னெஞ்சே யுன்னில் இனியா போற்றி
ஓம்
என்னையும் ஒருவனாக்கி யிருங்கழற் போற்றி
ஓம்
ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
ஓம்
ஏகனே அம்பிகா பதியே போற்றி
ஓம்
ஏய்ந்த வுமைநங்கை பங்க போற்றி
ஓம்
ஏரி நிறைந்தனைய செல்வ போற்றி
ஓம்
ஏலக் குழலி பாக போற்றி
ஓம்
ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
ஓம்
ஏழூழிக்கு அப்புறம் நின்றாய் போற்றி
ஓம்
ஏறேறிச் செல்லும் இறைவ போற்றி
ஓம்
ஏனத் திளமருப்புப் பூண்டாய் போற்றி
ஓம்
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
ஓம்
ஐயா போற்றி அணுவே போற்றி
ஓம்
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஓம்
ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றி
ஓம்
ஒப்பினை யில்லா உருவே போற்றி
ஓம்
ஒற்றை வெள்ளேறு உடையாய் போற்றி
ஓம்
ஓங்குசிற்றேமத்து ஒருவா போற்றி
ஓம்
ஓணகாந்தன் தளியாய் போற்றி
ஓம்
ஓணகாந்தீசுவரா போற்றி போற்றி
ஓம்
ஓமாம் புலியூர் ஒருவனே போற்றி
ஓம்
ஓராதார் உள்ளத்தில் நில்லாய் போற்றி
ஓம்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தாய் போற்றி