மாசானி அம்மன் 108 போற்றிகள்

0

 மாசானி அம்மன் 108 போற்றிகள்




 ஓம் எரிச்சநத்தம் எழுந்தருளும் அன்னை மாசானியே போற்றி ஓம்

ஓம் அகிலத்தை ஆள்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் அழகின் திரு உருவே மாசானியே போற்றி ஓம்

ஓம் அம்பாள் வடிவில் அமைந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் அருள்வாக்கு அளிப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் அண்ட பிரசங்கியே மாசானியே போற்றி ஓம்

ஓம் அன்னதானம் அளிக்கும் அம்மையே மாசானியே போற்றி ஓம்

ஓம் அட்சய பாத்திரமே மாசானியே போற்றி ஓம்

ஓம் அடியேன் நெஞ்சில் நிறைந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஆபத்தில் காப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஆங்காரம் கொண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஆறுபடிக் கதிபதியே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஆற்றில் நீராடிய அன்னையே மாசானியே போற்றி ஓம்

ஓம் இன்னல்கள் தீர்ப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் இருளனை வதைத்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் இதயத்தினுள் இருப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் இன்பம் தருபவேள மாசானியே போற்றி ஓம்

ஓம் உலகாளும் உத்தமியே மாசானியே போற்றி ஓம்

ஓம் உண்மையின் விளக்கே மாசானியே போற்றி ஓம்

ஓம் உள்ளமது குளிரவைப்பாய் மாசானியே போற்றி ஓம்

ஓம் உருள்வலம் காணும் உத்தமியே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஊழ்வினை தீர்ப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஊமைக்கருள் புரிபவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஊர் புகழும் உமையவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் எமனை வென்ற நாயகியே மாசானியே போற்றி ஓம்

ஓம் எங்கும் நிறைந்த ஈஸ்வரியே மாசானியே போற்றி ஓம்

ஓம் எங்கள் குல தெய்வமே மாசானியே போற்றி ஓம்

ஓம் எண்திசை புகழும் எழிலரசியே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஏணியாய் இருப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஏழு கன்னிகளுடன் இருப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஐங்கரனின் அன்னையே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஐம்பொன்னில் அமைந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஐந்துதலை நாகனுள் அமைந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஓடாதபேயெல்லாம் ஓட்டுபவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் கலியுக தெய்வமே மாசானியே போற்றி ஓம்

ஓம் கலங்கரை விளக்கே மாசானியே போற்றி ஓம்

ஓம் கண் கண்ட தெய்வமே மாசானியே போற்றி ஓம்

ஓம் கண்ணில் நிறைந்த கலைமகளே மாசானியே போற்றி ஓம்

ஓம் கனிமாலை கொண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் கன்னிகளைக் காப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் கார்மேகக் கூந்தலையுடையவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் காலங்கள் பல கடந்த கற்பூரவள்ளியே மாசானியே போற்றி ஓம்

ஓம் குறைகளைத் தீர்ப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் குழந்தையாய் பிறந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் குறிஞ்சி மலரே மாசானியே போற்றி ஓம்

ஓம் குலக்கொடி விளக்கே மாசானியே போற்றி ஓம்

ஓம் குளத்தில் குளிக்கும் குலமகளே மாசானியே போற்றி ஓம்

ஓம் குழந்தை வரம் கொடுப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் கோரப்பல் கொண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் கொடுமைகளை அழிப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் சக்தியாய் வருபவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் சங்கடங்கள் தீர்ப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் சிறுமியாய் வளர்ந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் சித்தர் முகம் கண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் சுமங்கலி கோலம் கொண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் சுடுகாடு காத்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் சுட்ட பிணம் தின்பவளே  மாசானியே போற்றி ஓம்

ஓம் செல்வாக்குத் தருபவளே  மாசானியே போற்றி ஓம்

ஓம் செய்வினை அகற்றுபவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் செவ்வாடை தரித்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் செந்நிற முகத்தாளே மாசானியே போற்றி ஓம்

ஓம் செண்பகம் தரித்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் செல்வாக்கு நிறைந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஞானிகளைக் காப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் நாகக் கன்னியாய் அமர்ந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் நிறைவுகள் தருபவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் நீதிகாக்கும் நிறைமகளே மாசானியே போற்றி ஓம்

ஓம் நெஞ்சில் நிறைந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் நெய் விளக்கு கொண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் தரணி புகழ்பாடும் தங்கமே மாசானியே போற்றி ஓம்

ஓம் தர்மத்தைக் காப்பவளே  மாசானியே போற்றி ஓம்

ஓம் தரணி ஆள்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் தங்க நிறத்தாளே மாசானியே போற்றி ஓம்

ஓம் தீராத நோயெல்லாம் தீர்ப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் துணையாக வருபவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் துயரங்கள் துடைப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் தோஷங்கள் நீக்கும் தூயவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பதினாறு தலைமுறை கண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பக்தர்களைக் காப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பஞ்சம் விரட்டுபவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பதினாறு அடியில் அமைந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பக்கத்துணையாய் இருப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பம்பை உடுக்கை கொண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பல அவதாரம் எடுத்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பார் புகழும் பரமேஸ்வரியே மாசானியே போற்றி ஓம்

ஓம் பார் புகழும் சக்தியே மாசானியே போற்றி ஓம்

ஓம் பில்லி சூனியம் எரிப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பெரும் பகை அழிக்கும் பேரருளே மாசானியே போற்றி ஓம்

ஓம் பெண்ணின் பெருமையே மாசானியே போற்றி ஓம்

ஓம் பேச்சியாய் நின்ற பேரானந்தமே மாசானியே போற்றி ஓம்

ஓம் பேரானந்தம் தரும் பேரன்பே மாசானியே போற்றி ஓம்

ஓம் பொய்களை எரிப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் மருந்தில்லா மகத்துவமே மாசானியே போற்றி ஓம்

ஓம் மண்ணில் மலரும் நெல்மணியே மாசானியே போற்றி ஓம்

ஓம் மண்ணில் மலர்ந்த பொன்னே மாசானியே போற்றி ஓம்

ஓம் மண்ணின் மணி விளக்கே மாசானியே போற்றி ஓம்

ஓம் மதி முகமுடையாளே மாசானியே போற்றி ஓம்

ஓம் மயான பூஜை கொண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் மகாமுனியுடன் சென்றவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் முன்னடி கருப்புடன் அமர்ந்தவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் வஞ்சம் தீர்ப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் வடக்கு முகம் பார்ப்பவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் வஞ்சிக் கொடியே மாசானியே போற்றி ஓம்

ஓம் வான்புகழ் கொண்ட வான்மதியே மாசானியே போற்றி ஓம்

ஓம் விண்ணில் படர்ந்த கண்ணே மாசானியே போற்றி ஓம்

ஓம் ராக்காச்சியாய் அமைந்த நாயகியே மாசானியே போற்றி ஓம்

ஓம் 108 கருப்பு கொண்டவளே மாசானியே போற்றி ஓம்

ஓம் ஆதிசக்தியே அன்னை மாசானியே மாசானியே போற்றி ஓம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top