ஓம் புதாய நம:
இவர் சந்திர கிரகத்தின் குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் உடையவர். அறிவாற்றல், பட்டப்பிடிப்பு, ஜோதிட, கணிதம் போன்ற அம்சத்தை அளிக்கக் கூடியவர். மணிமந்திரத்தன்மை இவருடைய அடக்கம்.)
புதன் த்யான ஸ்லோகம்
புதச் சதுர்பிர் வரதாபயாஸி
கதாவஹந்தம் ஸுமுகம் ப்ரசாந்தம்
பீதாப்ரபம் சந்த்ரஸுதம்ஸுரேட்யம்
ஸிம்ஹே நிஷண்ணம் புதமாச்ரயாமி
புதன் த்யான ஸ்லோகம் (வேறு வகை)
1. புதம் புஸ்தக ஹஸ்தம் ச பீத புஷ்ப ஸமத்யுதிம்
த்யாயேத் ஞானமயம் தேவம் பிரஸந்தம் ச சதுர்புஜம்
2. கட்க சூல கதாபாணிம் வரமுத்ராங் கிதம்ப்ரபும்
பீதாம் பரதரம் தேவம் பீதமால்யாநு லேபனம்
3. வஜ்ராத்யாபரணோ பேதம் கிரீட முகுடோஜ்வலம்
பீதாஸ்வரத மாருஹ்ய மேரும் யாந்தம் ப்ரதக்ஷிணம்
4. ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோ பேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்
மதனநூல் முதலா உள்ள மறைகளும் கல்வி ஞானம்
விதமுடன் அவர் அவர்க்கு விந்தைகள் அருள்வோன்; திங்கள்
சுதன்; பவிசு பாக்கியங்கள் சுகம் பல கொடுக்க வல்லவன்;
புதன், கவிப் புலவன், சீர்மால் பூங்குழல் போற்றி! போற்றி!
புத காயத்ரீ மந்திரம்
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்
புத ஸ்தோத்ரம்
உத்புத்யஸ்வாக்னே ப்ரதிஜாக்ருஹ்யேனமிஷ்டாபூர்த்தே ஸம்ஸ்ருஜேதாமயம்ச
புன: க்ருண்வன்ஸ் த்வா பிதரம் யுவான்மன்வாதான் ஸீத்வயி தந்துமேதம்
அதிதேவதா மந்த்ரம் :
தம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம்
ஸமூடமஸ்ய பான்கும்ஸுரே
ப்ரத்யதி தேவதா மந்த்ரம்
விஷ்ணோ ரராடமஸி விஷ்ணோ: பிருஷ்டஸி விஷ்ணோஸஞ்ப் த்ரேஸ்தோ
விஷ்ணோ ஸ்ஸயூரஸி விஷ்ணோர்திருவமஸீ, வைஷ்ணவமஸீ விஷ்ணவேத்வா
அதிதேவா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே புதாய நம:
புத கவசம்
அம்பொ னாடை அழகுபடப்பனை
பம்பு குங்கும மேனியும் பார்எலாம்
நம்பு புத்தக கையும் நயந்துகொள்
தம்பி ரான் புதன் தாளமலர் ஏத்துவாம்!
வரும்புதன் சென்னி காக்க
வளர்தரு மதியின் மைந்தன்
அரும்பிறை நெற்றி காக்க
அறிஞன்கண் இரண்டும் காக்க
விரும்புஉறு செவி இரண்டும்
விதுமகன் காக்க மெய்க்கண்
தரும்பல சுகந்தம் பூசும்
சாமியார் உயிர் புரக்க.
புத்தகம் ஏந்து நாதன்
புயவரை இரண்டும் காக்க
நித்தமும் தேவர் போற்று
நின்மலன் மருங்குல் காக்க
வித்தக வான நாதன்
விழைகரு நாபி காக்கச்
சுத்தநூல் கலைவல் லாளன்
சொல்லும்கடி தடம் புரக்க.
தேவர்கள் தலைவன் என்றும்
திருமலி தொடை புரக்க
மேவரும் உரோணி மைந்தன்
விழைதரு முழந்தாள் காக்க
ஆவன தருவோன் சங்கம்
அளிக்க வில்அவர் கரத்தோன்
பாவடி காக்க மேனி
பனிமதி புதல்வன் காக்க.
வேறு
நலமேவும் புதகவசம் படிப்பவர் கேட்பவர்
கேட்க நயந்து செய்வோர்
வலமேவும் துன்புஒழிய நோய்ஒழியப்
பல்லாண்டு வாழ்க்கை எய்தி
நிலமேவும் புத்திரரும் பௌத்திரரும்
மிகப்பெருக நினைந்த வெல்லாம்
அலமேவும் படிபெறுபவர் புண்ணியமு
மெய்க்கதியும் அடைவர் அம்மா.
புத ஸ்தோத்ரம்
(பத்ம புராணத்தில் உள்ளது)
(இதைப் பாராயணம் செய்வதால் ஜாதகத்தில் புதன் நீசனாகவோ தோஷமுள்ளவனாகவோ, புதனுடைய தசாபுக்திகளால் தோஷம் ஏற்பட்டாலும், அந்த தோஷங்கள் விலகுவதோடு கோரிய பொருள்களும் கிடைக்கும்.)
1. புதோ புத்திமதாம் ச்ரேஷ்டோ புத்திதாதா தனப்ரத:
ப்ரியங்கு கலி காச்யாம: கஞ்சநேத்ரோ மனோஹர:
2. க்ரஹோபமோ ரௌஹிணேயோ நட்சத்ரேசோ தயாகர:
விருத்த கார்யஹ்ந்தா ச ஸெளம்யோ புத்திவிவர்தன:
3. சந்த்ராத்மஜோ விஷ்ணுரூபீ ஞானீக்ஞோ ஞானிநாயக:
க்ரஹபீடாஹரோ தாரபுத்ர தான்ய பசுப்ரத:
4. லோகப்ரிய: ஸெளம்யமூர்த்திர் குணதோ குணவத்ஸல:
பஞ்சவிம்சதி நாமானி புதஸ்யைதானி ய: படேத்:
5. ஸ்ம்ருத்வா புதம் ஸதா தஸ்ய பீடா ஸர்வா விநச்யதி:
தத்தினே வா படேத் யஸ்து லபதே ஸ மனோகதம்:
புதன் ஸ்தோத்திரப் பாடல்
மதனநூல் முதல் நான்கு
மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவர வர்க்கு
விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன் பவிசு பாரி பாக்கியம்
சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவி புலவன் சீர்சால்
பொன்னடி போற்றி போற்றி!
(வேறு)
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி!
பதம்தந்து அருள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி!!