நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||
இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||
செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள், திருஷ்டி, தீவினைகள், பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும். தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.
புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.