சிவ ஷடாக்ஷர ஸ்தோத்திரம் பாடல் வரிகள் மற்றும் பாடலின் பொருள்

0
சிவ ஷடாக்ஷர ஸ்தோத்திரம் பாடல் வரிகள் மற்றும் பாடலின் பொருள்

ஓம்காரம் பிந்து சம்யுக்தம்,
நித்யம், த்யாயந்தி யோகினஃ,
காமதம், மோக்ஷதம் ச்சைவ,
ஓம்காராய நமோ நமஹ.

நமந்தி ரிஷயோ தேவாஃ,
நமந்தியப்சரஸா கணாஃ,
நர நமந்தி, தேவேஷம்,
நகாராய நமோ நமஹ.

மஹாதேவம், மஹாத்மானம்,
மஹாத்யானம் பராயணம்,
மஹா பாப ஹரம் தேவம்,
மகாராய நமோ நமஹ.

ஷிவம் ஷாந்தம் ஜகன்நாதம்,
லோகாணுக்ரஹ காரகம்,
ஷிவமே கபடம் நித்யம்,
ஷிகாராய நமோ நமஹ.

வாஹனம் வ்ருஷபோ யஸ்ய,
வாசுகி கண்ட பூஷணம்,
வாமே ஷக்தி தரம் தேவம்,
வகாராய நமோ நமஹ.

யத்ர யத்ர ஸ்திதோ தேவஃ,
சர்வ வ்யாபி மஹேஷ்வரஃ,
யோ குரு சர்வ தேவானாம்,
யகாராய நமோ நமஹ..

சிவ ஷடாக்ஷர ஸ்தோத்திரம் பாடல் பொருள் 

ஒரு புள்ளியோடு சேர்த்து ஓங்காரமாக அனுதினமும் யோகிகளால் தியானிக்கப் படக்கூடியவனும், அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி முக்தி அளிப்பபவனுமானாகிய அந்த, ‘ஓம்’கார ரூபியை வணங்கிப் பணிகின்றேன்.

ரிஷி வர்க்கங்களால் வணங்கப்படுபவனும், தேவ கணங்களால் பூஜிக்கப்படுபவனும், என்னாலும் மற்றும் அனைத்து தேவர்களாலும் மகிமைப் படுத்தப்படுபவனுமாகிய அந்த, ‘ந’கார ரூபியை வணங்கிப் பணிகின்றேன்.

மஹாதேவனும், உன்னத ஆன்மாக்களால் வணங்கப்படுபவனும், படிக்கவும் தியானிக்கவும் அற்புதமானவனும், பெரும் பாவங்கள் யாவையும் பொசுக்க வல்லவனுமாகிய அந்த, ‘ம’கார ரூபியை வணங்கிப் பணிகின்றேன்.

எல்லையற்ற சிவமும், சாந்த சொரூபியும், பிரபஞ்சத்தின் தலைவனும், உலகைப் பரிபாலிப்பவனும், அழிவற்ற பரம்பொருளுமாகிய அந்த, ‘சி’கார ரூபியை வணங்கிப் பணிகின்றேன்.

ரிஷப வாகனனும், வாசுகி என்ற பாம்பைக் கழுத்தில் அணிந்திருப்பவனும், சக்தியை இடப்புறம் தாங்கியிருப்பவனுமாகிய அந்த, ‘வ’கார ரூபியை வணங்கிப் பணிகின்றேன்.

எங்கெல்லாம் இறைமை உணரப்படுகிறதோ அங்கெல்லாம் உறைபவனும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மஹேஷ்வரனும், எல்லா தேவர்களுக்கும் குருவானவனுமாகிய அந்த, ‘ய’கார ரூபியை வணங்கிப் பணிகின்றேன்.

பல ஸ்ருதி (பலன் துதி):

ஷடாக்ஷரமிதம் ஸ்தோத்ரம்
யஃ படேத் ஷிவ சந்நிதவ்
ஷிவலோக மவாப்னோதிவ்
ஷிவேன சக மோததே.

ஆறு எழுத்துக்களால் (ஓம் நமசிவாய) கோர்க்கப்பட்டுள்ள இந்தத் துதியை சிவ சந்நிதியில் படிப்பவர்கள், சிவலோக பதவியை அடைந்து அவனோடு ஆனந்தமாக வாழ்வார்கள்.

Shiva Shadakshara Stotram Lyrics in Tamil

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top