திரு விளக்கு துதி
சீலத் திருவிளக்கே ஸ்ரீ தேவி லக்ஷ்மியே
கோலத் திரு விளக்கே கும்பிட்டேன் நின் அடியை
தில்லை வன நாதனும் சிவகாமி அம்மையும்
சிந்தையிற் கொண்டிருக்க செய்த வினை நீங்கி
விடும்
தந்தை தமர்தாய் சார்ந்த குரு அரசும் சிந்தை
மகிழ் வாழ்வை தேவியே தந்தருள்வாய்
தொட்டிலுக்கு பிள்ளையும் தொழுவுக்கு பால்
பசுவும்
பட்டறைக்கு நெல்லும் பதித்த மரக்காலும்
உனக்கெரிக்க எண்ணையும் எனக்குண்ண சோறும்
தட்டாமல் தாயே தந்தருள்வாய் தகவுறவே!!!