நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புதபகவான் வழிபாட்டின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். பெருமை மிக்க புதன் கிழமையில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும்.
புதன் எப்போதும் சொல் புத்திக்காரகன். இவர் சந்திரனின் மைந்தன். சந்திரன் நம் மனதின் எண்ண ஓட்டத்திற்கு சொந்தக்காரன். புத்தியை நிலைப்படுத்துபவன்.
புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை : புதன்கிழமை.
புதன் பகவானுக்கு உரிய ராசி :
மிதுனம், கன்னி.
புதன் பகவானுக்கு உரிய திசை :
வடகிழக்கு.
புதன் பகவானின் அதிதேவதை :
மகாவிஷ்ணு.
புதன் பகவானுக்கு உரிய நிறம் :
பச்சை. புதன்கிழமையில் பச்சை நிற ஆடை அணிவது புதன் தோஷத்தை போக்கும்.
புதன்கிழமையன்று தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
பசுவுக்கு - பசும் புல் - மன நிம்மதியும், உற்சாகமும் கிடைக்கும்.
பசுவுக்கு - பச்சை பயிறு - வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
பிராமணருக்கு - பச்சை பயிறு - பொருளாதாரம் முன்னேற்றம் பெறும்.
திருநங்கைகளுக்கு - ஆடை தானம் (பச்சை நிறம்) - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
மேலும் சிறப்பு பெற வழிபாட்டு நேரத்தில் சொல்ல வேண்டிய புதன் பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள்.
புதன் ஓரையில் விளக்கேற்றுங்கள் :
புதன் கிழமையில், புதன் ஓரை மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால்,
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
தொழில் வளர்ச்சியடையும். பொருளாதாரம் வளம் பெறும். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். சுபகாரியம் கைகூடும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.