கண் திருஷ்டியை போக்கி சகல பாவங்களிலிருந்தும் விடுபட உதவும் ஸ்ரீ அகோர மூர்த்தியின் மந்திரம்

0
கண் திருஷ்டியை போக்கி சகல பாவங்களிலிருந்தும் விடுபட உதவும் ஸ்ரீ அகோர மூர்த்தியின் மந்திரம் :

ஸ்ரீ அகோர மூர்த்தியின் மந்திரத்தை ஸ்மரிப்பதற்குத் (மனனம் செய்வதற்கு) திதி, வாரம் நக்ஷத்திரங்களைக் கவனிக்க வேண்டியதில்லை. 

அவரது மந்திரத்தை எந்தச் சமயத்தில், ஸ்மரித்த(மனனம்) போதிலும் அப்போதே எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கலாம். 

நாள் ஒன்றுக்கு நூறுமுறை ஸ்ரீஅகோர மந்திரம் ஜபிப்பவன் எல்லாப் பாவங்களையும் ஒழிப்பான். 

இது ஸ்ரீ அகோரமூர்த்தியின் மந்திர பிரபாவமாகும்.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பார்கள். 

கண் திருஷ்டி என்பது, அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்றாலும், பொதுவாக கண்திருஷ்டி படுவதை யாரும் விரும்புவதில்லை. 

அது தங்களது முன்னேற்றத்தை தடை செய்யக் கூடியது என்ற கருத்து ஆழமாக உள்ளது.

ஸ்ரீ அகோர மூர்த்தியானவர் இத்தகைய கண்திருஷ்டியை போக்கி, தடைகளை நீக்கி, வெற்றியை அருள்பவர். 

திருவெண்காட்டில் கோவில் கொண்டுள்ள இப்பெருமானை தரிசித்தால், கண் திருஷ்டி, ஏவல்கள், காரியத் தடைகள் போன்றவை விலகி, வாழ்வில் ஏற்றம் கிடைக்கும். 

தினமும் அதிகாலையில் 100 முறை ஸ்ரீஅகோர மூர்த்தியின் மந்திரத்துதியைச் சொல்லி 
வந்தால், நன்மைகள் பல நடக்கும்.
எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடலாம்

ஸ்ரீஅகோர மூர்த்தியின் மந்திரம்:

ஸகல கன ஸமாபம்
பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
புஜகதரம கோரம்

ரக்த வஸ்த்ராங்க தாரம்
பரசு டமரு கட்கம்
கேடகம் பாணச்சாயை
திரிசிகநர கபாலை
விப்ரதாம் பாவயாமி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top