பூஜை முறை
கற்கண்டு, வடை, பாயசம், தேன், தேங்காய், புஷ்பம், சந்தனம் முதலியன வைத்து தீபதூபம் காட்டி கீழ்கண்ட மந்திரம் சொல்லி செபம் செய்ய வேண்டும்.
மந்திரம்
"ஓம் கிலிம் சவ்வும்
ஸ்ரீம் ஹரீம் சர்வ
சௌபாக்கியம் தேவி
அருள் ஆனந்த ரூபி நாராயணி
மமவசம் குருகுரு சுவாஹா".
இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 -உரு வீதம் ஐந்து நாட்கள் செபம் செய்ய மந்திரம் சித்தியாகும்.
இதன் பலன்கள்
இம்மந்திரத்தை சித்தி செய்தவர்கள் மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு மேற்குரிய மந்திரத்தை மனதால் 9 உருவேற்றி அம்மஞ்சள் மந்திரித்து கொடுத்து பூசிவர சொல்லவும்.
இம்மஞ்சளை குழந்தைகளுக்கு பூசினால் குழந்தைகளுக்கு வரும் எல்லாவித தோசமும் (பாலகிரக தோசம்) நீங்கும். குழந்தை இல்லாதவர்கள் இம்மஞ்சளை பூசிவர குழந்தை பாக்கியம் உண்டகும். திருமணம் ஆகாத கன்னி பெண்கள் இம்மஞ்சளை பூசிவர உடனே வரன் கிட்டும், திருமணம் முடியும்.
மங்கலமான காரியம் எல்லாம் நடக்கும். என்று மலையாள மாந்திரீகம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
1008 உருவீதம் 5 நாட்கள் மனஓர்நிலையோடும் முழுநம்பிக்கையோடும் தீட்டு இல்லாத ஒரு தூய்மையான தனி இடத்தில் தேவிக்கு பூசை வைத்து செபித்தால் 5வது நாள் முடிவில் தேவி கனவில் தரிசனம் தருவாள்.
அச்சமயம் தாயை என வணங்கி இன்றுமுதல் உன்னை கொண்டு நான் செய்யும் சகல மங்கலகரமான காரியங்களும் சித்தியாக அருள்தர வேண்டினால் அன்று முதல் தேவியை நினைத்து கொடுக்கும் மஞ்சளால் சகல மங்கலகரமான காரியங்களும் தடையின்றி நடக்கும்.
பாவிகளுக்கும், மன அமைதி இல்லாதவனுக்கும்,பேராசை கொண்டவனுக்கும், நம்பிக்கை இல்லாதவனுக்கும் முறையான பூசையை செய்யதவனுக்கும், மந்திரத்தை முறையாக செபிக்காதவனுக்கும் மந்திரம் சித்தியாகாது.
ஐந்து நாட்களில் சித்தியாக விட்டால் இன்னும் சில தினங்கள் சித்தியாகும் வரை செபிக்கலாம். ஆனால் மனஓர்நிலையோடும் முழுநம்பிக்கையோடும் செய்ய ஐந்து நாட்கள் போதும்.